வோடபோன் இயக்குநர் பொறுப்பில் இருந்து குமார்மங்கலம் பிர்லா விலகல்.!!

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர் மற்றும் நிர்வாகமற்ற தலைவர் பதவியில் இருந்து குமார் மங்கலம் பிர்லா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வோடபோன் இயக்குநர் பொறுப்பில் இருந்து குமார்மங்கலம் பிர்லா விலகல்.!!

வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது குமார் மங்கலம் பிர்லா வோடபோன் ஐடியாவின் நிர்வாகமற்ற இயக்குனர் குழு மற்றும் நிர்வாகமற்ற தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

வோடபோன் ஐடியா நிறுவனம் சந்தித்து வரும் தொடர் நஷ்டமே குமார் மங்கலம் பிர்லா பதவி விலகியதற்கு காரணமாக கூறப்படுகிறது. குமார் மங்கலம் பிர்லாவின் கோரிக்கை இன்று நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.குமார் மங்கலம் பிர்லா-வுக்கு பதிலாக ஹிமான்ஷு கபானியா நிர்வாகமற்ற தலைவராக நியமிக்கப்பட்ட உள்ளதாகவும் கூறப்படுகிறது.