இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா.. காரணத்தை விளக்காத நிறுவனம்..!

சுமார் 20 ஆண்டுகளாக பல பதவிகளில் இருந்து வந்தவர் ரவிக்குமார்..!

இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் ராஜினாமா.. காரணத்தை விளக்காத நிறுவனம்..!

பிரபல மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான இன்போசிஸ் தலைவர் ரவிக்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரவிக்குமார்:

2002-ம் ஆண்டு இன்போசிஸ் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர் ரவிக்குமார். அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்தவர் சுமார் 20 ஆண்டுகளாக பல பதவிகளில் இருந்து வந்தார். 2016-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவரானார். 

ராஜினாமா:

அமெரிக்காவில் வசித்து வரும் ரவிக்குமார் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இன்போசிஸ் நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவு கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் வெளியானது. 

பாராட்டு:

அப்படியிருக்கையில் ரவிக்குமாரின் இந்த முடிவுக்கு என்ன காரணமாக இருக்கும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இதற்கான விளக்கத்தை இன்போசிஸ் நிறுவனம் கொடுக்காத நிலையில், அவர் செய்த பங்களிப்புகளுக்காக இயக்குநர்கள் குழு பாராட்டு தெரிவிப்பதாக மட்டும் தெரிவித்துள்ளது.