
2013ம் ஆண்டு முதல் அமெரிக்கா கலிபோர்னியாவில் கூகுள் தளத்தில் அனுபவத்துடன் பணியாற்றிய பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
ஊதிய வேறுபாடும் கடைபிடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் 2017ம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூகுளில் பணியாற்றிய பெண்களுக்கு 922 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது.