வடசென்னை அனல் மின்நிலையத்தில், மின் உற்பத்தி பாதிப்பு...!!

 வடசென்னை அனல் மின்நிலையத்தில், மின் உற்பத்தி பாதிப்பு...!!

வட சென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலனில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 600மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வட சென்னை அனல் மின் நிலையம்  உள்ளது.  1994ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த இந்த அனல் மின் நிலையத்தில் மெத்தம் 5 அலகுகள் உள்ளன. இதில் முதலாவது நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தியும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

ரூ.53,000 கோடி கடனை அடைக்க யோசனை; புதிய மின் நிலையங்கள் தனி நிறுவனமாக  மாறுமா? | Dinamalar

இந்நிலையில் 2வது நிலையின் 1வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் கசிவை சரிசெய்யும் பணிகளில் மின் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் கொதிகலன் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க:ஃபர்ஹானா இஸ்லாமிர்யர்களுக்கு எதிரான படம் இல்லை!!!!