சைனாகாரன் எதை எதையோ கண்டுபிடிக்கிறான்... செயற்கை நிலவை உருவாக்கியது சீனா..!!

சூரியனை தொடர்ந்து செயற்கை முறையில் , நிலவையும் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

சைனாகாரன் எதை எதையோ கண்டுபிடிக்கிறான்... செயற்கை நிலவை உருவாக்கியது சீனா..!!

சூரியனை தொடர்ந்து செயற்கை முறையில் , நிலவையும் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

கடந்த ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் அதீத கவனம் செலுத்திய சீனா, பல்வேறு புதுமை திட்டங்களை செயல்படுத்தி,  21 நூற்றாண்டிலேயே சிறந்த ஆண்டாக கடந்த ஆண்டை மாற்றி அமைத்தது.

இந்ததநிலையில்  ஈர்ப்பு விசை சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வசதியாக சிறிய செயற்கை நிலவை சீனா உருவாக்கியுள்ளது.

புவியீர்ப்பு விசை கொண்ட செயற்கை நிலவில்,   விரும்பும் காலத்திற்கு ஈர்ப்பு விசையை நீட்டிக்க முடியும் எனவும், இதன் மூலம் பிற நாடுகளைப் போல ஈர்ப்பு விசையற்ற விமானங்களில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்காமல் ஆய்வுகளை  எளிய வகையில் மேற்கொள்ள முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவை போல் செயற்கையாக 2 அடி விட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சந்திரனில், எடை குறைந்த மணல், கற்கள் துாசிகள் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.