நாங்கள் பொறுப்பல்ல... வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் பி.எஸ்.என்.எல்!

நாங்கள் பொறுப்பல்ல... வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் பி.எஸ்.என்.எல்!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள போலி இணையதளத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயரில், மர்ம நபர்கள் சிலர் போலியான இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.

இதேபோன்று ஆன்லைன் மூலம் பணம் வசூலிப்பதாகவும் மோசடியில் ஈடுபடுவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுபோன்ற போலி தகவல்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் இந்த இணையதளத்தை நம்பி பணம் செலுத்தி ஏமாந்தால், அதற்கு பிஎஸ்என்எல் நிறுவனமோ அல்லது அதன் குழும நிறுவனங்களோ பொறுப்பு ஏற்காது எனவும் தெரிவித்துள்ளது.