குறைந்த விலையில் 5ஜி ஐபோனை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டம்.!!

ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு குறைந்த விலையில் 5ஜி ஐபோனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறைந்த விலையில் 5ஜி ஐபோனை விற்பனை செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டம்.!!

ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு குறைந்த விலையில் 5ஜி ஐபோனை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம், ஐபோன் எஸ்.இ.3 மாடலை உருவாக்கியுள்ளது. புதிய ஐபோன் எஸ்.இ. 3 மாடலை இந்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.

பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட இந்த ஐபோன்,  முந்தைய ஐபோன் எஸ்.இ. 2 போன்றே காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டச் ஐ.டி. சென்சார் ஹோம் பட்டனும் பொருத்தப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் எஸ்.இ.3 மாடல், குறைந்த விலை 5ஜி ஐபோனாக இருக்கும். இதன் விலை 399 டாலர்களில் துவங்கும் என தெரிகிறது.