ஆப்பிள் 14 சீரீஸ் 4 தயாரிப்பே இந்தியாவில் தானாம்.. நம்ம பக்கம் திரும்ப என்ன காரணம்?

2022 இறுதியில் ஐபோன் 14 உற்பத்தியில் 5 சதவீதத்தை இந்தியாவில் தொடங்கவுள்ளதாக அறிவிப்பு..!

ஆப்பிள் 14 சீரீஸ் 4 தயாரிப்பே இந்தியாவில் தானாம்.. நம்ம பக்கம் திரும்ப என்ன காரணம்?

ஆப்பிள் 14 சீரீஸ் 4:

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 மாடலை இந்தியாவில் தயாரிக்கவுள்ளது. அமெரிக்காவின் கியூபர்டினா நகரில் கடந்த 7ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் ஐபோன் 14 சீரீஸில் 4 செல்போன்களை அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் அறிமுகப்படுத்தினார்.

 

இந்தியாவில் உற்பத்தி:

இந்தநிலையில் இந்த சீரீஸின் செல்போன்களை இந்தியாவில் தயாரிக்கவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி 2022 இறுதியில் ஐபோன் 14 உற்பத்தியில் 5 சதவீதத்தை இந்தியாவில் தொடங்கவுள்ளதாகவும், இதன் மூலம் 2025ம் ஆண்டுக்குள் இதன் உற்பத்தி 25 சதவீதமாக அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. 

பொருளாதார தடையால் புதிய முயற்சி:

அமெரிக்கா- சீன இடையேயான பொருளாதார தடை காரணமாக இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்தியாவுடன் செல்போனை உற்பத்தி செய்வதில் ஆர்வமுடன் இருப்பாகவும் அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.