ஆன்லைன் வர்த்தகத்தை தொடர்ந்து ஷோரும்கள் மூலம் கால் பதிக்கும் அமேசான்.!!

ஆன்லைன் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் அமேசான் முதல் முறையாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஆயத்த ஆடைகள் கடையை திறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் வர்த்தக துறையில் ஜாம்பவானாக பார்க்கப்படுவது அமேசான் நிறுவனம். ஆன்லைன் வர்த்தகம் மட்டுமின்றி ஓடிடி தளங்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்கள் என பல்வேறு துறைகளிலும் அமேசான் கால் பதித்து வருகிறது.

இந்த நிலையில் புதிய முயற்சியாக முதன் முதலாக நேரடி விற்பனையில் அமேசான் களமிறங்க உள்ளது. அதன்படி லாஸ் ஏஞ்சல்ஸில் ஆயத்த ஆடைகள் கடையை திறக்க அமேசான் திட்டமிட்டுள்ளதாகவும் இக்கடை இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட உள்ளதாகவும் அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.