8 ஆண்டுகளுக்கு பின் கூகுள் குரோம் பிரவுசரில் ஏற்பட்ட புதிய அப்டேட்!!

8 ஆண்டுகளுக்கு பின் கூகுள் குரோம் பிரவுசரில் ஏற்பட்ட  புதிய அப்டேட்!!

சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு, கூகுள் நிறுவனம் தனது குரோம் பிரவுசரின் லோகோவை மாற்றியுள்ளது.

பல்வேறு தரப்பினராலும் பயன்படுத்தப்படும் குரோம் பிரவுசரை, கூகுள் நிறுவனம் எளிமைப்படுத்தி வருகிறது. அந்தவகையில் பளபளப்புடன், முப்பரிமாண லோகோவாக தொடங்கப்பட்ட குரோம் பிரவுசர், 2Dயாக  பின்னர் மாற்றப்பட்டது.

இந்தநிலையில் புதிய லோகோவில், எந்த வித நிழலுமின்றி சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்கள் தட்டையாகவும், நடுவில் உள்ள நீல வட்டம் பெரிதாக பிரகாசமாக தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.