18 மாதங்களில் 5,000 வேலைவாய்ப்பு.. இப்போ 500 பேர மட்டும் வேலைவிட்டு அனுப்புறோம்.. ஓலாவின் பரிதாப நிலை..!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் ஏற்பட்ட பின்னடைவால் சரிந்த ஓலா நிறுவனம்..!

18 மாதங்களில் 5,000 வேலைவாய்ப்பு.. இப்போ 500 பேர மட்டும் வேலைவிட்டு அனுப்புறோம்.. ஓலாவின் பரிதாப நிலை..!

ஓலா:

போக்குவரத்தில் ஒரு புதிய அத்யாயம் என்றால் அது ஆன்லைன் டாக்சி புக்கிங் நிறுவனங்கள் என்று கூறலாம். அதில் சிறந்த நிறுவனமாக இருந்தது ஓலா நிறுவனம். வாகனங்கள் இல்லாதவர்கள் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, இங்கிருந்து அங்கு செல்ல வேண்டும் என ஆன்லைனில் காரையோ அல்லது ஆட்டோவையோ புக் செய்து கொள்ளலாம். 

கட்டணம் குறைவு:

இந்த நிறுவனங்கள் பல வகைகளில் பலருக்கும் உதவிகரமாக இருந்தது. சாதாரணமாக ஒரு இடத்தில் இருந்து நாம் 
ஆட்டோவிலோ அல்லது டாக்சி மூலமோ சென்றால் ஆகும் செலவைக் காட்டிலும் ஓலா செயலி மூலம் புக் செய்து செல்லும் போது 25 முதல் 50% குறைவாக இருக்கும் என்பதால், ஓலாவிற்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கத் துவங்கியது. 

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்:

தற்போது நமது புழக்கத்தில் ஓலா, ஊபர், ரேப்பிடோ போன்ற பல நிறுவனங்கள் தற்போது வாடகைக்கும், டிராப்பிங் போன்ற சேவைகளை செய்து வருகிறது. இதற்கிடையில் ஓலா நிறுவனம், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சந்தைக்கு கொண்டு வந்தது. ஓலா நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. 

30 பேர் ராஜினாமா:

ஆனால் அடிக்கடி இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆங்காங்கே தீப்பற்றி எரியத் துவங்கியதன் வீடியோக்கள் இணையத்தில் வைரலானதில் இருந்து மிகப்பெரிய சரிவை ஓலா நிறுவனம் சந்தித்தது. ஓலா எலக்ட்ரிக், ஓலா கார்ஸ், ஓலா டேஷ் என அடுத்தடுத்து தனது புதிய யுக்திகளை புகுத்திய காலகட்டத்தில் அந்நிறுவனத்தில் இருந்து சுமார் 30 உயர் அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வெளியேறினர். 

சரிந்த சாம்ராஜ்யம்:

அதுமட்டுமின்றி சந்தையில் ஓலாவுக்கு மாற்றாக குறைந்த விலையில் டாக்சி புக்கிங் நிறுவனங்கள் வந்ததால், ஓலாவின் மார்க்கெட் சரியத் துவங்கியது. அதன் விளைவு இந்தாண்டு தொடக்கம் முதல் பல பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் பலரை பணியில் இருந்து நீக்கி வந்தது. ஆயினும் கூட ஓலா நிறுவனம் அதன் மிக முக்கியமாக பார்க்கக் கூடிய ஓலா டெக் துறையை மட்டும் கை வைக்காமல் இருந்து வந்தது. 

500 பேருக்கு பிங்க் சிலிப்:

ஆனால் தற்போது அங்கேயும் ஆட்களை குறைக்கும் கட்டத்திற்கு ஓலா நிறுவனம் சென்றிருக்கிறது. டெக் ஊழியர்கள் சுமார் 500 பேருக்கு ஓலா நிறுவனம் பிங்க் சிலிப் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதில் பெரும்பாலான ஊழியர்கள் ANI டெக்னாலஜிஸ் பிரிவை சேர்ந்தவர்கள். இந்த நிறுவனம் தான் ”ஓலா ஆப், ஆன்லைன் டாக்சி சேவை” போன்றவற்றை அளித்து வருகிறது. 

2,000 ஊழியர்கள் பணிநீக்கம்:

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஏற்பட்ட சரிவு தான் ஓலாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. ஓலா நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் 2,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளடு. அதுமட்டுமின்றி பழைய கார் விற்பனை வர்த்தகப் பிரிவாக செயல்பட்டு வந்த ஓலா கார்ஸ் மற்றும் ஓலா டேஷ் போன்ற பிரிவுகளை மொத்தமாக மூடியது குறிப்பிடத்தக்கது. 

5,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு:

ஆனால், ஓலா நிர்வாகம் மென்பொருள் அல்லாமல் துறையில் அதிக கவனம் செலுத்துவதாகவும், அடுத்த 18 மாதத்தில் பொறியியல் பிரிவில் 5000 ஊழியர்களை சேர்க்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறது.