லெப்டினட் ஜெனரலாக கரன்பீர் சிங் பொறுப்பேற்பு...!!

லெப்டினட் ஜெனரலாக கரன்பீர் சிங் பொறுப்பேற்பு...!!

சென்னை தலைமைச் செயலகத்தின் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் இந்திய ராணுவத்தின் தென் மண்டல லெப்டினட் ஜெனரலாக கரன்பீர் சிங் பிரார் பொறுப்பேற்றார்.

இந்திய ராணுவத்தின் தென்மண்டல லெட்டினட் ஜெனரலாக கடந்த 3 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த லெட்டினன்ட் ஜெனரல் அருண் மகாராஷ்டிர மாநிலம் கடக்வாஸ்லாவில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி தளத்தின் தளபதியாக பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் தென்மண்டல லெட்டினட் ஜெனரலாக கரன்பீர் சிங் நியமனம் செய்யப்பட்டார்.

கடந்த 40 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த கரன்பீர் சிங் தென்மண்டல லெட்டினட் ஜெனரலாக பதவி ஏற்பதற்கு முன்பு இந்திய ராணுவ பீரங்கி படையின் தலைமை இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மண்டல லெட்டினட் ஜெனரலாக இன்று பதவியேற்ற அவர் அலுவலகத்திற்கு செல்லும் முன்பு போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து மறைந்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார் பின்னர் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டு அவர் இராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.