தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்தடை!!!

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தவுள்ளோம். - மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி.

தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்தடை!!!

கோயம்பேடு காய்கறி சந்தையில் மூன்றில் ஒரு பங்கு என்ற விகிதத்தில் கடைகளை திறப்பதற்கு ஆலோசித்து வருகிறோம்.  சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு.

 

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜீவால், சிஎம்டிஏ நிர்வாக செயலாளர் சுன்சோங்கம் ஜெடக் சிரு ஆகியோர் அரசின் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர் அதனை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தனர்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  ககன் தீப் சிங் பேடி,  கோயம்பேடு மார்கெட்டில் பாதுகாப்பு விதிகளை பின்பற்றுவது இல்லை என புகார் வந்திருக்கிறது . பாதுகாப்பு மற்றும் கண்கானிப்பை தீவிரமாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம் என்றும் மார்கெட்டில் உள்ள வியாபாரிகள்,  தொழிலாளிகள், வாகன ஓட்டிகள் என அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்தார்.

 

மேலும் தடுப்பூசி செலுத்தாத வியாபாரிகள் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரக்கூடாது என அறிவுறுத்தவுள்ளோம். வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் பாதுகாப்பு விதிகளை கட்டாயம் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மார்கெட்டில் கண்கானிப்பு கோபுரங்கள் அமைத்து தொடர்ந்து கண்கானிக்க திட்டம்