இளைஞர்கள் புத்தகங்கள் படிப்பதில்லையா? யார் சொன்னது - எழுத்தாளர் இமயம்

இளைஞர்கள் புத்தகங்கள் படிப்பதில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானது என தெரிவித்துள்ளார் எழுத்தாளர் இமயம்.
குவெம்பு ராஷ்டிரிய விருது:
கன்னட மொழியின் மகத்தான எழுத்தாளர் குவெம்பின் நினைவு அறக்கட்டளை சார்பாக, 2013ம் ஆண்டு முதல் குவெம்பு ராஷ்டிரிய புராஸ்கர் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு (2022 ) தமிழ் மொழிக்காக பரிசு தொகையாக ரூ. 5 லட்சமும் வெள்ளி பதக்கமும் வென்றுள்ளார் தமிழ்நாடு எழுத்தாளர் இமயம்.
முதலமைச்சர் பாராட்டு:
இந்த விருதை தமிழ்நாடு முதலமைச்சரிடம் காட்டி வாழ்த்து பெற்றச் சென்ற இமயத்திடம், தேசிய அளவில் கவனம் பெறக்கூடிய ஒரு எழுத்தாளராக நீங்கள் திகழ வேண்டும். அதற்காக தொடர்ந்து பல நூல்களை எழுத வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதையும் படிக்க: தந்தையின் மரண செய்தி அறியாமல் காமன்வெல்த்தில் தங்கம் வென்ற மாணவி..!
உண்மைக்கு மாறானது:
முதலமைச்சரை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இமயம், 1960, 70களில் இருந்த பதிப்பகங்களை விட தற்போது பதிப்பகங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதைப் போன்ற புத்தகங்கள் படிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பத்திரிக்கைகள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. எனவே தற்போதைய இளைஞர்கள் புத்தகங்கள் படிப்பதில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானது எனவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எழுத்தாளர்களையும் தமிழ் மொழியை ஊக்குவிக்கவும் எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் என பல்வேறு ஊக்கங்களை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார் இமயம்.