7ஆம் தேதி வரை அரசு சொல்வதை செய்வோம்,.அதன் பின்? -வணிகர் சங்க விக்கிரமராஜா பேச்சு.! 

 7ஆம் தேதி வரை அரசு சொல்வதை செய்வோம்,.அதன் பின்? -வணிகர் சங்க விக்கிரமராஜா பேச்சு.! 

சென்னை அசோக் நகரிலுள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் வணிகர் சங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில் ஊரடங்கு காலத்தில் எப்படி பொருள்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது என்பது பற்றி பேசப்பட்டது.

இந்த ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா "தமிழக முதல்வர் அவர்கள் கொரோனாவை வேறோடு அழிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு மீண்டும் முழு ஊரங்கை அமல்படுத்தியுள்ளார்கள். அதற்கு முன்பு எங்களை அழைத்து பேசினார்கள்" எனத் தெரிவித்தார். 

மேலும் "வீடு தேடி வரும் மளிகைக்கடை" என்ற பெயரில் 1ஆம் தேதி முதல் வீடு தேடி பொருட்கள் வரும் என்றும்,இதற்காக 4 தொலைபேசி எண்களை எங்கள் தலைமை அலுவலகத்தில் தரவுள்ளோம் என்றும்,  சென்னையில் எங்கு மளிகை பொருட்கள் கிடைக்கவில்லை என்றாலும் போன் செய்தால் 21பேர் கொண்டு அமைக்கப்பட்டுள்ள குழுவினர் பொருட்களை கொண்டு சேர்க்க ஆவண செய்வர் எனவும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்  7ஆம் தேதி வரை அரசு சொல்வதை செய்வோம் 8ஆம் தேதி கடை திறக்க வழிவகைச்செய்வதாக கூறியுள்ளார்கள்.. மொத்த கடைகள்  திறப்பதற்கும் வீடுதோறும் பொருட்கள் கிடைப்பதற்கும் வழிவகை செய்துள்ளோம். 10 பேர் போட்டி போட்டு வாங்கும் போது 3 கடைகள் விலையேற்றம் செய்ததை கண்டறிந்து நாங்கள் நடவடிக்கைகள். எடுத்துள்ளோம் அவர்கள வருத்தம் தெரிவித்து இதுபோல் இனிமேல் நடைபெறாது என எழுத்து  பூர்வமாக கொடுத்துள்ளார்கள். அரசுக்கு கெட்டபெயர் வரக்கூடாது என்று நாங்கள் உறுதியாக உள்ளோம் மக்களுக்கும் பொருட்கள் கிடைக்கும் வண்ணம் செயல்படுவோம் எனக் கூறினார்.