10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது ’வலிமை’ மோஷன் போஸ்டர்!

'வலிமை' மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.  

10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது ’வலிமை’ மோஷன் போஸ்டர்!

அஜித் நடிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 11-ம் தேதி வெளியானது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தின் பூஜை 2019-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது. தற்போது இந்தப்படத்தின் மோஷன் போஸ்டரை  படக்குழு வெளியிட்டது.

பைக் ரேஸ் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மோஷன் போஸ்டரைத் தொடர்ந்து 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 2 ஆண்டுகளாக தொடர்ச்சியாக 'வலிமை' அப்டேட் கேட்டு வந்த ரசிகர்களுக்கு, திடீரென்று ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது படக்குழு.

இந்த நிலையில், 'வலிமை' மோஷன் போஸ்டர் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனை அஜித் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.