என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல…ஜமாத் நிர்வாகிகள் விளக்கம்!

என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் அல்ல…ஜமாத் நிர்வாகிகள் விளக்கம்!

மதுரை முஸ்லிம் ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து இயக்கங்கள் கட்சிகள் சார்பாக மதுரை தெற்குவெளி வீதியில் உள்ள பள்ளிவாசலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அத்துமீறலில் ஈடுபட்ட என்.ஐ.ஏ

என்.ஐ.ஏ. சோதனைக்கு வருத்தத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி சோதனை என்ற பெயரில் அத்துமீறலையும், சட்ட விதிமுறைகளையும் சோதனை என்ற பெயரில்சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை வண்மையாக கண்டிக்கிறோம்.

பல நபர்களை கைது செய்துள்ளது இந்த நடவடிக்கை என்பது திடீர் நடவடிக்கை அத்துமீறல் நடவடிக்கை மத்திய புலனாய்வுத்துறை இதை செய்துள்ளது. மத்திய புலனாய்வு துறை அதிகாரிகளோடு துப்பாக்கி ஏந்திய போலீஸ் அதிகாரிகள் 20 அல்லது 25க்கும் மேற்பட்டோர் வந்து எங்களை அச்சுறுத்தினர்.இவர்களோடு தமிழ்நாடு காவல்துறையும் கை கோர்த்துள்ளது

தேசத் துரோகிகள் என குற்றச்சாட்டு

மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் இங்கே என்ன செய்ய வந்திருக்கிறார்கள் என்பது மதுரை மாநகர ஆணையாளர் அவர்களுக்கு தெரியாமல் இருப்பது வேதனையான ஒன்று.

பெண்கள் மட்டுமே இருக்கும் வீட்டில் போலீசார் அத்துமீறி உள்ள சம்பவம் வேதனையை அளிக்கிறது. இவர்களது சோதனையில் நான்கே நான்கு புத்தகங்களை மட்டுமே எடுத்துள்ளனர். ஆனால் அந்த இல்லத்தில் உள்ள அனைத்து பெண்களையும் விரட்டியோடு மட்டுமில்லாமல் தேசத் துரோகிகள். என்று சொல்லி அச்சுறுத்தி உள்ளனர்.

அதிகாலை தொழுகையை நிறுத்திவிட்டார்கள்

அதிகாலை நேரத்தில் எங்களது தொழுகையை நிறுத்தி விட்டார்கள் பள்ளிவாசலை மூடிவிட்டார்கள். மக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்திய அடிப்படையில் தான் பள்ளிவாசல்கள் மீண்டும் திறக்கப்பட்டது

இந்த சோதனை பெண்கள், குழந்தைகள் அந்த இல்லத்தில் உள்ள முதியவர்கள் அனைவரையும் வேதனைப்படுத்தி உள்ளது. ஒரு கர்ப்பிணி பெண்ணையும் விட்டு வைக்காமல் இந்த காவல்துறையினர் துன்புறுத்தியுள்ளனர். காரணம் எங்களை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு காவல்துறையை வைத்து சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் குற்றவாளிகள் அல்ல

இப்பொழுது கைது செய்துள்ள யாரும் குற்றவாளிகள் அல்ல அப்பழுக்கற்றவர்கள். நீதிமன்றம் மக்களுக்காகவோ சட்டத்திற்காகவோ இல்லை என்பதை எங்களது வேதனை. ஆர்எஸ்எஸ் என்கிற சக்தியின் சித்தார்ந்தம் எங்களை இந்த அளவுக்கு பாடாய்படுத்துகிறது.

அப்பாவிகளாக இருக்கக்கூடிய எங்களது நண்பர்களை கைது செய்தவர்களை உறுதியாக மீட்டெடுப்போம். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் விடுதலை செய்திற வரையில் நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம்.

எங்களோடு தோழமையில் இருக்கிற தமிழ்நாடு அரசாங்கம் அதே சமயம் தமிழ்நாடு காவல்துறையைப் பற்றி நாங்கள் குறை சொல்லவில்லை.