திருநங்கைகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம்.! -இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.! 

திருநங்கைகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டம்.! -இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்.! 

திருநங்கைகள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை இன்று துவங்கி வைக்கிறார் 


தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் முதல் நாளிலேயே, தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் மே மாதம் 8ம் தேதி முதல் பயணம் செய்யலாம் என தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.

அதனையடுத்து, பெண்களைப் போல் ​திருநங்கையர்களும் இலவசமாக பயணிக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்று திருநங்கையர்கள் முதலமைச்சருக்கு டிவிட்டரில் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில், திருநங்கைகளும் அரசு பேருந்துகளில் இலவசமாக பயண செய்யும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதலமைச்சர் இன்று துவங்கி வைக்கிறார்.இந்த நிகழ்ச்சியில், மூத்த அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, தமிழக அரசின் செயலாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.