முதியவரை மிரட்டி காலில் விழ வைத்த நபர்... வி.ஏ.ஓ அலுவலகத்தில் நடந்த அவலம்!

கோவை அன்னூரில், மனு அளிக்க வந்த நபர், வி.ஏ.ஓ.வை மிரட்டியதோடு, அவரது உதவியாளரை, காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அன்னூர் ஒன்றியம், ஒற்றர் பாளையம் ஊராட்சியில் கிராம நிர்வாக அலுவலராக கலைச்செல்வி என்பவரும், அவருடைய உதவியாளராக முத்துசாமி என்பவரும் பணியாற்றி வருகின்றனர். இவர்களிடம் மனு அளிக்க வந்த கோபிநாத் என்பவர் உரிய ஆவணங்கள் இல்லாமல் விஏஓ விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் தலையிட்ட முத்துசாமி அரசு அலுவலர்களிடம் தவறாகப் பேச வேண்டாம் என்று கூறி சமாதானப்படுத்த முயற்சி செய்துள்ளார். இதனால் கோபமடைந்த கோபிநாத் முத்துசாமியை சாதிபெயரை கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வற்புறுத்தியதாக தெரிகிறது. இதனால் பயந்துபோன முதியவர் முத்துசாமி, கோபிநாத் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கதறி அழுதுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.