போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த ஜி.எஸ்.டி சாலை...!

Published on

சென்னையை அடுத்த  தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  

தீபாவளி பண்டிகையை ஒட்டி சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பேருந்து, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்னை திரும்பியதால், தாம்பரம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இரவு முதல் கனமழை பெய்து வருவதால் சாலை ஓரம் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிப்பதால் வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி தவித்துள்ளன. இந்நிலையில் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com