அரசு நிர்ணயித்த விலை கட்டுப்படியாகவில்லை,..நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் புகார்.! 

அரசு நிர்ணயித்த விலை கட்டுப்படியாகவில்லை,..நஷ்டம் ஏற்படுவதாக வியாபாரிகள் புகார்.! 

நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்பவர்களை மொத்த விலைக்கே விற்பனை செய்ய கட்டாயபடுத்தக்கூடாது என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மக்கள் வெளியே வராமல் இருக்க மாநகராட்சி மற்றும் வியாபாரிகள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக வீட்டிற்கே வந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் அதற்கான விலையையும் அரசு தீர்மானித்தது.  

இந்நிலையில் நடமாடும் வாகனங்கள் மூலம் அரசு நிர்ணயித்த விலைக்கு காய்கறி விற்பனை செய்வது கட்டுபடியாகவில்லை என்றும், நஷ்டம் ஏற்படுகிறது என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  

இது தொடர்பாக தமிழக வணிகர் சங்கங்களின் பாதுகாப்பு இயக்கம் சார்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்வது நல்ல செயலாக இருந்தாலும், கோயம்பேடு மார்க்கெட்டில் விற்பனை செய்யும் அதே விலைக்கு விற்க அறிவுறுத்தியுள்ளது கட்டுபடி ஆகாத விலையாக உள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.

கோயம்பேட்டில் இருந்து விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மேலும் செலவிட வேண்டிய சூழலில் குறைந்த பட்ச விலையை வைத்து விற்பனை செய்ய அறிவிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக கூறிய அவர்கள் இதன் காரணமாக இன்று பெரும்பாலானோர் விற்பனைக்கு செல்லாத நிலையில்
இதே நிலை தொடர்ந்தால் வியாபாரிகள் பலரும் வாழ்வாதாரத்தை இழக்க வேண்டி இருக்கம் என தெரிவித்தனர்