ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசின் முடிவை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

தொடர்வண்டித் துறையை ஒன்றிய அரசு தனியாரிடம் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் ரயில் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் ரயில்வே பணிமனைகளை தனியாரிடம் விற்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

தனியாரிடம்  தொடர்வண்டித் துறையை ஒப்படைத்தால் அந்த துறையே அழிந்து போகும் ஆபத்து ஏற்படும். மேலும் எளிய மக்கள் தொடர்வண்டி சேவையை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். எனவே  ஒன்றிய அரசு ரயில்வே துறையை தனியாருக்கு விற்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யூ ரயில்வே தொழிற்சங்கத்தினர் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டன்ர்.