துணி காயப்போடும்போது பரிதாபம்... மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி....

ஊத்தங்கரை அருகே துணி காய போட சென்ற பெண்கள் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துணி காயப்போடும்போது பரிதாபம்... மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி....
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பிச்சைமுத்து, இவரது மனைவி இந்திரா(52) மகள்
மகாலட்சுமி(25), பேத்தி அவந்திகா(03) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இன்று விடியற்காலை 6 மணி அளவில் துணி துவைத்து விட்டு ஈரத் துணியை காய வைப்பதற்காக வீட்டின் வாசலில் உள்ள கம்பியில் துணியை காய வைக்க சென்றபொழுது மின்சாரம் தாக்கியது, அப்பொழுது இந்திரா. தனது பேத்தியை இடுப்பில் வைத்துக் கொண்டு துணி காயா சென்று போது கம்பியிர் உள்ள மின்சாரம் தாக்கியது.

இதனால் அலறிய சத்தத்தை கேட்ட மகள் மகாலட்சுமி சம்பவ இடத்திலே தூக்கி வீசப்பட்டு விழுந்து கிடந்தனர். அப்போது இவர்கள் சத்தம் கேட்டு பொதுமக்கள் வந்த பொழுது மூவரும் உயிரிழிந்து உள்ளது தெரிய வந்தது.

மின்சாரம் தாக்கியதற்கான காரணம் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கிய அரசு தொகுப்பு வீடுகள் தற்போது இடிந்து விழும் அபாயத்தில் கம்பிகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. அந்த கம்பியில் தன் குழந்தை தூங்குவதற்கு கட்டிய ஊஞ்சலின் ஓரத்தில் இரும்பு கம்பி ஒன்று இணைந்து உள்ளது. அதன் மூலமே வெளியில் வீட்டு வாசலில் உள்ள துணி காய வைத்துள்ள கம்பிக்கு உராய்வு மூலம் மின்சாரம் பாய்ந்து மூவரின் உயிரை பறித்துள்ளது.

இது சம்பந்தமாக சிங்காரப்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம் சிங்காரப்பேட்டை யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிச்சைமுத்து குடும்பத்தினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com