அசலை விட 7 மடங்கு வட்டி வாங்கிய கந்து வட்டிக்காரன்: கொடுமையை தாங்கமுடியாமல் தற்கொலை செய்த நபர்...

திருவண்ணாமலை அருகே கந்துவட்டி கொடுமையால் லாரி உரிமையாளர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அசலை விட 7 மடங்கு வட்டி வாங்கிய கந்து வட்டிக்காரன்: கொடுமையை தாங்கமுடியாமல் தற்கொலை செய்த நபர்...

திருவண்ணாமலை மாவட்டம்,  சின்னபாலிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம். லாரி உரிமையாளரான இவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். தொழிலை மேம்படுத்த கோட்டாங்கல் கிராமத்தைச் சேர்ந்த வடிவேலிடம் கந்து வட்டிக்கு ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு 7 லட்சம் ரூபாய் வட்டி கட்டிய நிலையில், அசலை திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது.இதையடுத்து ராமஜெயத்தின் 95 சென்ட் விவசாய நிலத்தை வடிவேலு  மிரட்டி  தனது உறவினர் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.. இதனால் மனஉளச்சலில் இருந்த ராமஜெயம் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனிடையே ஆத்திரமடைந்த  உறவினர்கள்,  கந்துவட்டி வடிவேலுவை கைது செய்யக்கோரியும், நிலத்தை மீட்டுத்தரக்கோரியும் சடலத்துடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை அடுத்து  உறவினர்கள் கலைந்து சென்றனர்.