ஓசில வாங்கி குடிச்சப்போ தெரியலையா? மதுக்கடையை மூட சொன்ன போலீசை மிரட்டும் திமுக மகளிரணி அமைப்பாளர்...

நெல்லை திசையன்விளையில் மதுக்கடையை மூட சொன்ன எஸ்.ஐ. யை திமுக மகளிரணி அமைப்பாளர் போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசில வாங்கி குடிச்சப்போ தெரியலையா? மதுக்கடையை மூட சொன்ன போலீசை மிரட்டும்  திமுக மகளிரணி அமைப்பாளர்...

நெல்லை மாவட்டம் திசையன் விளை ஊடன்குடி சாலை அருகிலுள்ள அரசு மதுக்கடையை தி.முக.மாவட்ட மகளிரணியை சேர்ந்த ஜெனிபர் என்பவரின் கணவர் தினகர் நடத்தி வந்துள்ளார்.

 இந்நிலையில் கடந்த ஊரடங்கினை அமல்படுத்துவதற்கு முன்பாக இயங்கி வந்த மதுபான கடையில்  வழக்கம் போல குடிகார கூட்டம் மது அருந்தி கொண்டு இருந்தன.

அப்போது அங்கு இரவு நேர ரோந்து பணிக்காக  வந்த  எஸ். ஐ. மற்றும் காவலர் ஒருவர்  கடையின் முன்பாக அரைகுறை ஆடைகளுடன் நின்று மது அருந்தியவர்களை  கடுமையாக எச்சரித்துள்ளனர்.

மேலும் கடை நடத்துபவரிடம் இதுபோன்ற சம்பவங்கள்  அரசின் விதிகளை மீறி நடத்தக்கூடாதெனவும்  கூறியுள்ளனர். இதனையறிந்த ஜெனிபர் சம்பந்தப்பட்ட காவல்துறையை சேர்ந்த இருவரை மொபைலில்  தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார்.

தற்போது அவர்  போனில் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்பிரச்சனை போலீஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது..

எல்லாருக்கும் சட்டம் ஒன்று தான் நிச்சயம் சட்டம் தன் கடமையை செய்யும்.  யாராக இருந்தாலும் அரசு பராபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் என்ற வார்த்தை, வாசகங்களில் மட்டும் அல்லாது இந்த சம்பவத்தில் செயல்படுத்தப்படுமா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.