பாஜக தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும்-திருநாவுக்கரசு!

பாஜக தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும்-திருநாவுக்கரசு!
Published on
Updated on
1 min read

சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடை பயணம் இன்று நடைபெற்றது. அதில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் சார்பாக நடை பயணம்

 திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலை அருகிலிருந்து தொடங்கி அரசு மருத்துவமனை அருகே உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் நிறைவடைந்தது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்ட திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்த பாத யாத்திரை சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பா.ஜ.க ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது.

அண்ணாமலை பதவி விலக வேண்டும்

மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது பா.ஜ.க வினர் செருப்பு வீசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டிதனமான செயல். அமைச்சர் என்றில்லை தனி மனிதன் மீதும் இது போன்ற தாக்குதல் செய்ய கூடாது. கருத்தை கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும்.

 இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும். நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் ஆனால் ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளது அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, ஆளுநர்  அரசியல் பேச கூடாது என்றார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com