வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.

திண்டிவனத்தில் இயங்கி வருகின்ற கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரியில் பயணம் மாணவர்கள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர் விடுதி இயங்கி ஒன்று இயங்கி வருகின்றது.
பாழடைந்த விடுதி கட்டிடம்
இங்கு 75 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த கல்லூரி விடுதியின் கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிய நிலையில், கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் இடிந்தும் , உடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது. இதில் உள்ள சன்னல்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், விஷப் பூச்சிகள் அவ்வப்போது விடுதியின் உள்ளே வந்து செல்கின்றது. மேலும் இந்த கட்டிடம் எப்பொழுது இடிந்து விழுமோ என்கிற அச்சத் தோடு மாணவர்கள் இங்கே தங்கி படித்து வருகின்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் பலமுறை போராட்டங்கள் நடத்திய நிலையில் அப்போது வருகின்ற துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்து செல்வதோடு ,அந்தப் பக்கம் திரும்பி கூட பார்ப்பதில்லை.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில் இன்று இந்த விடுதியில் தங்கி படிக்கின்ற மாணவர்கள் கல்லூரியை புறக்கணித்து , மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு நல்ல முறையில் இல்லாததால் அவர்கள் உணவை சாப்பிட மறுத்து திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த திண்டிவனம் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன் மற்றும் ரோசணை காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமையிலான போலீசார் நேரில் சென்று, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தகவல்
எங்களால் சரியாக படிக்க முடிய வில்லை என்றும் , விடுதியை சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் எங்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவு கிறது. ஆகையால் அடிப்படை வசதிகள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து துறை சார்ந்த அதிகாரிகள் வழக்கம் போல் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் மாணவர்களும் வழக்கம்போல் போராட்டத்தை கைவிட்டனர்.