இப்பத்தோன்றியது தான் தென்காசி... ஆன அது தான் பெஸ்ட்... மா. சுப்பிரணியன் பாராட்டு!!

இப்பத்தோன்றியது தான் தென்காசி... ஆன அது தான் பெஸ்ட்...  மா. சுப்பிரணியன் பாராட்டு!!

தமிழகத்திலேயே தென்காசியில்தான், இயற்கை முறையில் கொரோனா சிகிச்சை மையம் சிறப்பாக செயல்படுவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரணியன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தென்காசி மாவட்டத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டன.  பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், தென்காசி, புதிதாக தோன்றி மாவட்டம் என்றாலும், அரசு அறிவித்த பல்வேறு திட்டப்பணிகள்  உடனுக்குடன் செய்யப்பட்டுள்ளது என்று பாராட்டினார்.

அத்துடன், தமிழகத்திலேயே சித்த மருத்துவத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தென்காசி மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது என்று பாராட்டு தெரிவித்தார்.