வெடிகுண்டு வழக்கில் கைதானவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை!

வெடிகுண்டு வழக்கில் கைதானவர் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை!

கடந்த 2014 ஆம் ஆண்டு முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள் ப.சிதம்பரம் மற்றும் நாராயணசாமி ஆகியோரின் வீடுகளில் இருந்து பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது. தமிழ்நாடு விடுதலைப் படையின் பெயரில் துண்டறிக்கைகளும் அந்த இடங்களில் போடப்பட்டிருந்தது.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்காக இந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டதாக அந்த துண்டறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இந்த வழக்கில் தமிழ்த்தேச மக்கள் கட்சியைச் சேர்ந்த திருச்செல்வம், தமிழரசன், காளை லிங்கம், கவியரசன், ஜான் மார்டின், கார்த்திக்,  உள்ளிட்ட ஆறு பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். காளை லிங்கம், கவியரசன் மற்றும் ஜான் மார்ட்டின் உள்ளிட்ட மூவர் சில மாதங்களுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையாகினர்.

இந்நிலையில் தமிழ்த்தேச மக்கள் கட்சியைச் சேர்ந்த கார்த்திக் ஆகஸ்ட் 18 அன்று வேலூர் மத்திய சிறையிலிருந்து விடுதலையானார். அக்கட்சியின் நிர்வாகிகள் சிறையிலிருந்து விடுதலையான கார்த்திக்கை வரவேற்றனர்.