
பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா-வின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனைத்து இந்திய மொழிகளிலும் 50 ஆயிரத்துக்கு மேல் பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்தியவர் பின்னணி பாடகி பி.சுசீலா. இவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டுவிட்டரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரகுமான், தென்னிந்திய திரையுலகின் தலைசிறந்த பாடகியான பி.சுசீலாவிடம் பேசியதாகவும், அப்போது 99 சாங்க்ஸ் படத்தை ஓ.டி.டியில் பார்க்கும்படி கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
படத்தை பார்த்த சுசிலா, தன்னுடைய வாழ்க்கையை இதுபோல படமாக்க வேண்டும் என்றும் ஆசைப்பட்டதாகவும், அதற்காக தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டதாகவும் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.