சிபிசிஐடி விசாரணையில் நம்பிகை இல்லை...ஸ்ரீமதியின் பெற்றோர்! 

தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை செய்து வழக்கை திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர்.

சிபிசிஐடி விசாரணையில் நம்பிகை இல்லை...ஸ்ரீமதியின் பெற்றோர்! 

கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கை தற்போது தமிழ்நாடு சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வழக்கை திசை திருப்ப முயற்சி

இதனிடையே புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்காட வந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை ஸ்ரீமதியின் பெற்றோர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் ஸ்ரீமதி வழக்கில் சிபிசிஐடி தற்கொலை என்ற கோணத்தில் மட்டுமே விசாரணை செய்து வழக்கை திசை திருப்ப முயற்சித்து வருகின்றனர். ஒருதலைப்பட்சமாக நடக்கும் இந்த சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றாக ஒரு புலன் விசாரணை தேவை எனவும் கூறினர். 

நீதிமன்ற கண்காணிப்பில் வழக்கு

இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்தின் பண ஆதிக்கமும், ஜாதி பின்புலம் உள்ளதால், நியாயமான விசாரணை தேவை என்று அவர்கள் கூறினர். எனவே நீதிமன்ற கண்காணிப்பில் குழு அமைத்து இந்த விசாரணையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் சிபிசிஐடி விசாரணையின் கோணம் முற்றிலுமாக தவறாக உள்ளதால், இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனரைச் சந்தித்து முறையிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.