கோவாக்ஸின் 2-வது டோஸ் போடப்போறிங்களா? இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி அதாவது கோவாக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள இன்றும் நாளையும் இரண்டு நாள் சிறப்பு முகாமை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

கோவாக்ஸின் 2-வது டோஸ் போடப்போறிங்களா? இன்றும் நாளையும் சிறப்பு முகாம்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் கொரோனா தடுப்பூசி அதாவது கோவாக்ஸின் இரண்டாம் தவணை செலுத்தி கொள்ள இன்றும் நாளையும் இரண்டு நாள் சிறப்பு முகாமை சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதற்காக 62,050 கோவேக்ஸின் தடுப்பூசிகள் சென்னை முழுவதும் உள்ள அனைத்து  சிறப்பு தடுப்பூசி முகாமிற்கும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுநாள் வரை 17,58,187 நபர்களுக்கு முதல் தவனை தடுப்பூசியும், 6,04,804 நபர்களுக்கு இரண்டாம் தவணை  தடுப்பூசியும் என மொத்தம் 23,82,991 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இரண்டாம் தவணை தடுப்பூசி செதுத்த வேண்டிய காலத்தை கடந்து சுமார் 89,500 நபர்கள் இருப்பது மாநகராட்சிக்கு தெரிய வந்துள்ள நிலையில் மாநகராட்சியின் சார்பில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த தவறிய நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, மண்டல அலுவலகங்களில் இருந்து தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்து கொள்ளும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

அதன்படி, தொலைபேசி வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டவர்களில் இதுவரை 30480 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும், தற்போதைய நிலவரப்படி சுமார் 59,000 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய காலத்தை கடந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். இவர்களில் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களுக்கு இன்றும் நாளையும் மாநகராட்சியின் அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்ஸின் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை கோடம்பாக்கம் புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருக்கின்றனர்..

கோவேக்ஸின் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்களை கடந்த நபர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட மாநகராட்சியின் தடுப்பூசி மையங்களுக்கு சென்று இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு பயனடையுமாறு மாநகராட்சி தெரிவித்துள்ளது.