சிவசங்கர் பாபா மாணவிகளை தவறாக அல்ல, தாத்தா போலவே கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்.! -சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் விளக்கம்.! 

சிவசங்கர் பாபா மாணவிகளை தவறாக அல்ல, தாத்தா போலவே கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்.! -சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் விளக்கம்.! 

பள்ளி மாணவிகளை தாத்தாவை போல் சிவசங்கர் பாபா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார் என சுஷில் ஹரி பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு  பாலியல் தொல்லை கொடுத்ததாக அப்பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா மீது எழுந்த புகாரில் சிபிசிஐடி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் அனைத்துமே பொய் என அப்பள்ளியின் ஆசிரியர்கள் பிரவீனா,காயத்ரி,பீனா மற்றும் பக்தர்கள் பாலா,குருமூர்த்தி ஆகியோர் கூட்டாக மயிலாப்பூரில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், சிவசங்கர் பாபா குறித்தான பாலியல் புகார்களுக்காக குழந்தைகள் நல ஆணையத்தில்  ஆஜராகிய போது  டேராடூனில் சிவசங்கர் பாபா மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டது குறித்த அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை முடிந்து டெல்லிக்கு சென்றதாகவும்,ஆனால் போலீசார் டேராடூனிலிருந்து டெல்லிக்கு தப்பி சென்றதாக பொய்யாக தெரிவித்துள்ளனர் என்று கூறியதாக தெரிவித்தனர்.

மேலும், பள்ளி மாணவிகளை பாபா  தாத்தா போல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பாரே தவிர தவறாக நோக்கத்துடன் ஒரு போதும் நடந்தது இல்லை எனவும், பள்ளி மாணவிகளை அழைத்து சென்று பாபாவிடம் விடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர் தீபா 10 ஆண்டுகளுக்கு முன்னரே வேலையை விட்டு சென்றுவிட்ட போது போலீசார் வழக்குபதிவு செய்தது குழப்பமாக இருப்பதாகவும்  கூறினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், சுஷில் ஹரி பள்ளி குறித்து வெளிவரக்கூடிய செய்திகளால் குடும்பத்தினரின் வற்புறுத்தலின் பேரில் 2 ஆசிரியர்கள் பணியை விட்டு சென்றதாகவும்,15 ஆசிரியர்கள் சென்றதாக கூறுவது பொய்யான தகவல் எனவும், சிவசங்கர் பாபா குறித்து வெளிவந்த அனைத்து வீடியோக்கள்,புகைப்படங்கள் பொய்யானவை,போதுமான ஆதாரங்கள் இல்லாமல் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளதாகவும்,தீர்ப்பு வழங்கும் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என தெரிவித்தனர். அதோடு இந்தியாவிலேயே  சிறந்த பள்ளியாக சுஷில் ஹரி பள்ளி திகழ்ந்து வருவதாகவும்,பல மாணவிகள் உயர்ந்த பொறுப்பில் இருந்து வருவதாக அவர்கள் கூறினர்.