பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்.! காவல் ஆணையர் உறுதி.! 

பாலியல் தொந்தரவு தொடர்பாக புகாரளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும்.! காவல் ஆணையர் உறுதி.! 

சென்னை கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் ஆய்வு செய்த சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காவலர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

 அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கொரோனா இரண்டாவது அலையில் 1500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தற்போது 350 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் தெரிவித்தார், காவலர்களுக்கு இதுவரை 84% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக குறிபிட்ட அவர் விரைவில் முழுமையாக அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்கப்படும் எனக் கூறினார். 

அதன் பின் பி.எஸ்.பி. பி பள்ளி பாலியல் விவகாரம் பற்றிய கேள்விக்கு பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தனிநபர் சம்பந்தப்பட்டதல்ல  சமூகத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிட்டார். மேலும்  சமூக ஊடகங்களில் புகார்கள் பரவிவரும் நிலையில் அவை வழக்குகளாக பதியப்படுவதில்லை என குறிப்பிட்ட அவர், சென்னையில் சமூக வளைதளங்கள் கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் இதேபோன்று மற்றோறு புகார் குறித்து பாதிக்கப்பட்ட நபரிடம் பேசிவருவதாகவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

மேலும், பாலியல் தொந்தரவு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்கள் மீது ரகசிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய சங்கர் ஜிவால் தைரியமாக புகார் அளிக்க முன்வரவேண்டும் என்றார்