சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ அதிமுகவில் இல்லை. ! எடப்பாடி பழனிசாமி அதிரடி.! 

சசிகலாவோ அவரது குடும்பத்தினரோ அதிமுகவில் இல்லை. ! எடப்பாடி பழனிசாமி அதிரடி.! 

சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேர்தல் தோல்விக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டம் என்பதால் இது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள விருகை ரவி,சத்யா,ராஜேஷ்,ஆதி ராஜாராம், வளர்மதி,உள்ளிட்டோரும், முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் வந்தனர். 

 
அதைத் தொடர்ந்து  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொண்டார். ஆனால் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கடைசி வரை இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. இது அதிமுக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சி காலத்தில் காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் பணிகளை துவங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம்,இதுகுறித்து தற்போது கூட பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் இதற்கான அனுமதியை மத்திய அரசு சார்பாக வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது என்று தெரிவித்தார்.

அதன்பின் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தனியாக அறிக்கை வெளியிடுவது மற்றும் தற்போது தனியாக ஆலோசனை நடத்துவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்:

அரசியல் குறித்து எதிர்கட்சி தலைவராக நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறேன் என்றும் அரசியல் குறித்து அவர் எழுதுகிறார் என்றும் இன்று அவர் வீட்டில் பால் காய்ச்சுவதால் மட்டுமே கூட்டத்திற்கு வரவில்லை என்றும் இன்று நல்ல நாள் என்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு வந்ததாகவும் எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

மேலும் சசிகலா குறித்த கேள்விக்கு அவர் அதிமுகவில் இல்லை. அறிக்கை வாயிலாக ஊடங்கங்கள் வாயிலாகவும் பத்திரிகை வாயிலாகவும் செய்தி அனுப்பி வருகிறார். அவர் அதிமுக நிர்வாகியோடு பேசியதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவர் வாயாலே கூறிவிட்டார் நான் அரசியலில் இருந்து விலகி விட்டதாக என்றும் தற்போது ஒரு சிலர் அரசியல் காரணங்களுக்காக இதனை செய்வதாகவும் அதிமுக கட்சியின் நிர்வாகிகள் ஒரே கருத்தாக ஒற்றுமையாக உள்ளதாகவும் சசிகலா குடும்பத்தை சேர்ந்த எவரும் இந்த இயக்கத்தில் இல்லை எனபது தான் உண்மை என்றும் தெரிவித்தார். தேர்தல் தோல்வி குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும் கொரோனா பாதிப்பு குறைந்த பின்பு அரசு தளர்வு அளித்த பிறகு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.