கவலைபடதீங்க நிச்சயம் நான் வருவேன், எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை போல  நிச்சயம் கட்சியை கொண்டு வருவேன்: சசிகலா பேசிய 8வது ஆடியோ வெளியாகி பரபரப்பு...

நீச்சயம் நான் மீண்டும் வருவேன் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை போல  நிச்சயம் கட்சியை கொண்டு வந்து விடுவேன் என சசிகலா பேசும் 8-வது ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கவலைபடதீங்க நிச்சயம் நான் வருவேன், எம்.ஜி.ஆர்,ஜெயலலிதாவை போல  நிச்சயம் கட்சியை கொண்டு  வருவேன்: சசிகலா பேசிய 8வது ஆடியோ வெளியாகி பரபரப்பு...

 சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை ஆன பின்னர் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக தாம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போகிறேன் என்று அறிவித்தார் சசிகலா.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சசிகலா பேசும் ஆடியோக்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. சசிகலா வீட்டில் இருந்தே கட்சியின் நம்பிக்கையான, விசுவாசமான தொண்டர்கள் சிலர் கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு போன் செய்து, சின்னம்மா வீட்டில் இருந்து பேசுகிறோம்.. அம்மா பேசனும் என்கிறார்கள் என்ற குரலுடன் இந்த ஆடியோக்கள் வலம் வருகின்றன.

 இந்த நிலையில் தற்போது தொண்டர்களிடம் சசிகலா பேசும் 8-வது ஆடியோ வெளியாகி உள்ளது. அதில் தொண்டரிடம் நலம் விசாரித்தார் சசிகலா, பின்னர் நீங்கள் இல்லாமல் ஒன்றரை கோடி தொண்டர்கள் தவித்து வருவதாக அந்த தொண்டர் சசிகலாவிடம் பேசுகிறார்.

 நிச்சயம் நான் திரும்ப வந்து விடுவேன் என்றும் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதாவை போல நிச்சயம் கட்சியை கொண்டு வந்து விடுவேன் கவலைபடாதிங்க நான் மீண்டும் விரைவில் வருவேன் என சசிகலா பேசினார். கொரோனா தாக்கம் முடிந்த பின்னர் நிச்சயம் தொண்டர்கள் அனைவரையும் பார்பேன் என்றும் நீங்கள் கவலைப்படாமல் இருங்க என சசிகலா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.