கனிமவளக் கொள்ளை...சிறை பிடிக்கப்பட்ட வாகனம்!

மேற்கு வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் சார்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் துறைக்கு புகார் மனு கொடுத்திருந்தனர்.
கனிமவளக் கொள்ளை...சிறை பிடிக்கப்பட்ட வாகனம்!
Published on
Updated on
1 min read

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த கரடிமடை, பூலுவபட்டி, ஆலந்துறை உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து சட்டவிரோதமாக கிராவல் மண் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் டிப்பர் லாரியில் அள்ளப்பட்டு வந்தது.

கனிம வளங்கள் கொள்ளை

இந்த கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு யானை வழித்தடத்தை அளித்து பள்ளம் உருவாக்குவதை கண்டித்து கனிம வள கொல்லையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை கோரி மங்கள பாளையம் மேற்கு வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கம் சார்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் துறைக்கு புகார் மனு கொடுத்திருந்தனர்.

அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகார் கொடுக்கப்பட்டிருந்த சங்கத்திற்கு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அடிப்படையில் சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டு இரண்டு செங்கல் சூளையின் உரிமம் உள்ளிட்டவை சரிபார்க்கப்பட்டு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

உரிமையாளருக்கு அபராதம்

இந்த நிலையில் இன்று ஆலந்துறை அடுத்த மங்களபாளையம் மலை அடிவாரப் பகுதியில் கனரக இயந்திரத்தில் மண் அள்ளுவதாக சமூக ஆர்வலருக்கு தகவல் கிடைத்து. இதை அடுத்து சம்பவ  இடத்திற்கு சென்ற அவர்கள் வாகனத்தை சிறை பிடித்தனர். இதில் சிலர் அங்கிருந்து தப்பி ஓடினர். சம்பவ இடத்திற்கு  வனத்துறையின் தனிப்பிரிவு அதிகாரிகள்  விரைந்து சென்று வாகனத்தை சிறை பிடித்து வாகன உரிமையாளர் அருண்குமார் என்பவருக்கு 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.‌

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com