சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுமா..?!

தமிழக சட்டசபைக் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற உள்ளார்.

சட்டசபையில் இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுமா..?!

தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற உள்ளார்.

தமிழக சட்டசபையின் நடப்பு கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. காலை 10மணிக்கு சட்டப்பேரவை துவங்கியதும் மதிப்பீட்டுக்குழு, பொது கணக்குக்குழு, பொது நிறுவனங்கள் குழு, அரசு உறுதிமொழிக்குழு ஆகிய குழுக்கள் பேரவைக்கு அறிக்கை அளிப்பார்கள். பின், அரசினர் சட்டமுன் வடிவு அறிமுகம் செய்யப்படும். இதன் பிறகு, நேரமில்லா நேரத்தில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும். குறிப்பாக, நீட் தேர்விற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. பின், காவல்துறை மற்றும் மீட்புப்பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் பதிலுரை வழங்கி பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

மேலும்,110 விதியின் கீழ் முதலமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவும் வாய்ப்புள்ளது.  அதன் தொடர்ச்சியாக, சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சட்ட முன்வடிவுகளும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படும்.. இறுதி நாள் என்பதால், இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது கேள்வி பதில் நேரம் இருக்காது..