எச்.ராஜா பற்றி பேசினால் அதை உங்களால் செய்தியில் போடமுடியாது,.! காட்டமாக பதில்கூறிய அமைச்சர் கே.என்.நேரு.!

எச்.ராஜா பற்றி பேசினால் அதை உங்களால் செய்தியில் போடமுடியாது,.! காட்டமாக பதில்கூறிய அமைச்சர் கே.என்.நேரு.!

எச்.ராஜாவின் பேச்சுகளுக்கெல்லாம்  கருத்து சொன்னால் அதை உங்களால் செய்திகளில் போட முடியாது.
என அமைச்சர் கே.என்.நேரு காட்டமாக கூறினார்.

திருப்பத்தூர் மாவட்டதில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டார். அங்கு அதிகாரிகளை சந்தித்து கொரோனா பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்டத்தினை அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் கண்டுகொள்ளாததால் தான் இராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது எனக் கூறிய அவர், இராமநாதபுரம் மாவட்டம் குதிரைமல்லியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ஆய்வு நடந்து வருகிறது. அந்த பணி முடிந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் தண்ணீர் தேவை முழுமையாக  பூர்த்தியாகும் எனத் தெரிவித்தார், 

மேலும் பாஜக எச்.ராஜா குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு எச்.ராஜாவின் பேச்சுகளுக்கெல்லாம்  கருத்து சொன்னால் அதை உங்களால் செய்திகளில் போட முடியாது என்று காட்டமாக பேசிய அவர், பாஜகவை சேர்ந்த எல்.முருகன் மற்றும் எச்.ராஜா போன்றவர்கள் அவர்களுக்கென்று தனி நீதியையும், பிறருக்கு தனி நீதியையும் வகுத்துக் கொள்வார்கள். பாண்டிசேரி அமைச்சரவையில் பங்கேற்றுள்ள பாஜக அங்கு மதுபான கடைகளை திறந்து 15 நாட்கள் ஆகிவிட்டது என்று கூறினார்.