அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்

வங்க கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால், தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடல் பகுதி மற்றும், தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இன்று புதுக்கோட்டை, மதுரை கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இரண்டு நாட்களுக்கு சூறாவளி காற்று வீசக் கூடும் என்பதால், தென்மேற்கு வங்க கடல் பகுதிக்கு அடுத்த இரு நாட்கள் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.