முதியோர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்!

 முதியோர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய முன்னாள் அமைச்சர்!

புதுக்கோட்டை அம்பாள்புரம் இரண்டாம் வீதியில் உள்ளது நேச கரம் முதியோர் அறக்கட்டளை இங்கு 45 முதியோர்கள் தங்கியுள்ளனர். இதில் 10 ஆண் முதியோரும் 35 பெண் முதியோரும் இங்கு தங்கி உள்ளனர் இவர்களுக்கு பல்வேறு அமைப்பினர் பிறந்தநாள் நினைவு நாள் விசேஷ நாட்களில் உணவளிப்பது வழக்கம். 

அவ்வகையில் தீபாவளியை முன்னிட்டு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான சி. விஜயபாஸ்கர் முதியோர்களை சந்தித்து வேட்டிகள்,சேலைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். அதனைப் பெற்றுக் கொண்ட முதியோர்கள் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என மனதார வாழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.