பொதுசேவைக்காக காமராசர் கொடுத்த பள்ளியை அபகரித்த மதுவந்தி குடும்பம்.! வெளிவந்த தகவல்.! 

பொதுசேவைக்காக காமராசர் கொடுத்த பள்ளியை அபகரித்த மதுவந்தி குடும்பம்.! வெளிவந்த தகவல்.! 

பி.எஸ்.பி.பி பள்ளியில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து தமிழகத்தையே உலுக்கி உள்ளது. பள்ளியில் சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ராஜகோபாலன் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அந்த பள்ளியின் டிரஸ்டியாக இருக்கும் மதுவந்தி மீது சமூகவலைதளவாசிகளின் பார்வை திரும்பியுள்ளது. 

இந்நிலையில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியை ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பம் அபகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இது தொடர்பான ஒரு பதிவும் வாட்ஸ்அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பரவிவருகிறது.  


சமூகவலைத்தளங்களில் பரவிவரும் பதிவு "வீரபாண்டியாகட்டபொம்மன் பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
ஏற்றமிறைத்தாயா? நீர்பாய்ச்சி நெடுவயல் கண்டாயா? அல்லது அங்கு கொஞ்சிவிளையாடும் எம்குல பெண்களுக்கு மஞ்சளரைத்துப் பணிபுரிந்தாயா?  இந்த மண்ணுக்கு சொந்தக்காரியா? என்று கூட வசனம் பேசத்தோன்றுகிறது.

உண்மையில் #பாலபவன்செகண்டரிஸ்கூல் என்பதுதான் அந்தப்பள்ளியின் பெயர். 

பொதுசேவையில் ஈடுபட்டிருந்த பெண்கள் சிலர் இணைந்து சங்கம் அமைத்து கூட்டுமுயற்சியினால்  -  அன்றைய முதல்வர் #காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு, அரசாங்க நிலத்தை பொது பள்ளியின் பயன் பாட்டுக்குக் கொடுத்து 13.11.1962ல் அடிக்கல் நாட்டு விழாவையும் நடத்தியுள்ளது.

அதற்கு பிறகு அப்பள்ளியின் நிர்வாக உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் ஓரம் காட்டி ஒய்.ஜி.பார்த்தசாரதி குடும்பம் கபளீகரம் செய்து தன் பெயருக்கு மாற்றிக் கொண்டு #பத்மசேஷாத்ரிபாலபவன் P.S.B.B. என்று பெயரைமாற்றி கல்வி வியாபாரம் செய்யும் நிறுவனமாக மாற்றப்பட்டு விட்டது.

பொது அமைப்பாக இருந்த பள்ளியை சுயநலத்துடன் தன் குடும்ப பாரம்பரிய சொத்துபோலக்கருதி இன்று உரிமை கொண்டாடுகிறார்கள் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் மதுவந்தி வகையறாக்கள்.!

இன்றும் வழக்கு நிலுவையிலுள்ளதாக தெரிகிறது.

பார்க்கலாம்.... இனி உச்சிக்குடுமியை விரித்துப்போட்டுக்கொண்டு.... 
சாம.. பேத.. தான... தண்டம்.... என தன் முஸ்தீபுகளை எல்லாம் காட்டி அபகரிக்க முயற்சிப்பார்கள் ஆவாள்கள்.!

இதற்கே..... மதுவதியின் வகையறாக்கள் மீது நில அபகரிப்பு வழக்கு தொடுக்க முகாந்திரம் உள்ளது.!

பார்ப்போம்.....!" இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.