ஆடி கார் மட்டும் தான் இருக்கு.. சொந்தமா வீடு கூட இல்ல தெரியுமா..? மதன் மனைவி உருக்கமான பேட்டி 

சரியான ஆதாரங்கள் இல்லாமல் மதன் மீது  குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி கிருத்திகா குற்றஞ்சாட்டினார்.

ஆடி கார் மட்டும் தான் இருக்கு.. சொந்தமா வீடு கூட இல்ல தெரியுமா..? மதன் மனைவி உருக்கமான பேட்டி 

ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகா சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், 

கடந்த 10 ஆண்டுகளாக மதன் எந்த சொத்துகளையும் வாங்கவில்லை. யூடியூபில் பப்ஜி விளையாட்டில் பேசியது என் குரல் தான் என பரவிய தகவல் தவறானது. யூடியூப் சேனலுக்கு நான் அட்மின் இல்லை. அதற்கான வங்கிக் கணக்கு மட்டுமே என் பெயரில் உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மதன் வீடுகள் கார்கள் போன்ற சொத்துக்களை வாங்கி குவிக்கவில்லை. நாங்கள் சொந்த வீட்டில் கூட  வசிக்கவில்லை. எங்களிடம் சொகுசு கார்கள் இல்லை. ஆடி ஏ6 கார் மட்டுமே உள்ளது. போலீஸ் பறிமுதல் செய்த மற்றொரு ஆடி கார் எங்களுடையது அல்ல. யாருடையது என அவர்கள் தெரிவிக்க வேண்டும் என்றார்.

சரியான ஆதாரங்கள் இல்லாமல் மதன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், யூடியூப் சேனலில் 20 மணி நேரம் வேலை பார்த்து எனது கணவர் சம்பாதித்துள்ளார் என்றும் என்னுடைய வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது வீடு சாவிகள் போலீசாரிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.