ஆசிரியைகளையும் விட்டு வைக்காத  ராஜகோபாலன்: தோண்ட தோண்ட வெளி வரும் உண்மைகள்...

பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியைகள் சிலரிடமும் பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் வெளிவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியைகளையும் விட்டு வைக்காத  ராஜகோபாலன்: தோண்ட தோண்ட வெளி வரும் உண்மைகள்...

மாணவிகளை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கியதாக ராஜகோபாலன் என்ற ஆசிரியர் கடந்த மாதம் 24ம் தேதி கைது செய்யப்பட்டார். நீதிமன்ற காவலில் இருந்த ராஜகோபாலன் 3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் பல முக்கிய திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளன.இந்த நிலையில்
பத்மா சேஷாத்திரி பள்ளியில் பல ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் அடைந்துள்ளனர்.

 தவறு செய்த மற்ற ஆசிரியர்களையும் கண்டுபிடிக்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது, பள்ளி ஆசிரியர் இது ஒரு பக்கம் இருக்க பத்மா சேஷாத்திரி பள்ளியில் இருக்கும் சில ஆசிரியைகளிடமும் ராஜகோபாலன் தவறாக நடந்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 பள்ளியில் சேர்ந்த புதிதில் சில ஆசிரியர்களிடமும் இவர் தவறாக நடந்து இருக்கிறார். பாலியல் ரீதியாக அவர்களை சீண்டி உள்ளார். நிர்வாகம் ஆசிரியைகள் அப்போதே பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் ராஜகோபாலன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவரிடம் ஒரு மன்னிப்பு கடிதம் மட்டுமே வாங்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை கைப்பற்றும் முடிவில் தமிழக காவல்துறை உள்ளது. 

 ராஜகோபாலன் அதேபோல் ராஜகோபாலன் மூலம் துன்புறுத்தலுக்கு ஆளான ஆசிரியைகளை தேடும் பணியும் நடந்து வருகின்றது. இவர்களை கண்டுபிடித்தால் போஸ்கோ இல்லாமல் கூடுதல் வழக்குகளையும் பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.