ஒருத்தரையும் விடக்கூடாது,..தனிப்படை அமைத்த அன்பில் மகேஷ்,.. கூண்டோடு சிக்கும் பள்ளி நிர்வாகம்.!

ஒருத்தரையும் விடக்கூடாது,..தனிப்படை அமைத்த அன்பில் மகேஷ்,.. கூண்டோடு சிக்கும்  பள்ளி நிர்வாகம்.!

சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், இவர் சென்னையில் புகழ்பெற்ற பி.எஸ்.பி.பி என்று அழைக்கப்படும் பத்ம சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில்  இணைய வழி வகுப்பின் போது இடுப்பில் துண்டுடன் அருவருக்கத்தக்க வகையில் மாணவர்கள் முன்னிலையில் தோன்றிதாகவும்,  அவர்களிடம் ஆபாசமாக பேசுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அதே பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டம் பிரிவு 12 இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதாவது இந்த பாலியல் சீண்டல் புதிது இல்லை என்றும், 5 ஆண்டுகளாகவே இது தொடர்ந்து நடந்து வந்து இருப்பதும் அவரது வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அதோடு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் தன்னை தவிர ஐந்து பேர் சம்மந்தப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளது விசாரணை செய்த அதிகரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

மேலும் இந்த விவகாரத்தை திமுகவும் முக்கியமாக கருதுகிறது. அதனால் தான் நேற்று திமுக எம்.பி கனிமொழி உடனடியாக இதுகுறித்து பேசியதும், அதைத் தொடர்ந்து 4 மணி நேரத்தில்  விசாரணை, 12 மணி நேரத்தில் கைது என அரசும் அதிரடி காட்டியது. மேலும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது. 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த அப்பள்ளியின் முதல்வரிடமும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்படவுள்ளது. 5 ஆண்டுகள் பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளது அந்த ஆசிரியரின் வாக்குமூலம் வழியே வெளிவந்ததால் இதில் நிச்சயம் நிர்வாகத்துக்கும் தொடர்பு இருக்கும் என்றே அரசு கருதுவதாகவும் இதனால் கூடிய விரைவில் பள்ளி நிர்வாகத்தில் இருக்கும் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. 

மேலும் இதற்காக  தனி குழு அமைத்து விசாரிக்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் அரசு சிறப்பு கவனம் செலுத்தும் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.