மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டமான பேரத்தில் ஈடுபட்ட பி.எஸ்.பி.பி பள்ளி.! குட்டி பத்மினி மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.!  

மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டமான பேரத்தில் ஈடுபட்ட பி.எஸ்.பி.பி பள்ளி.! குட்டி பத்மினி மூலம் வெளிச்சத்துக்கு வந்த உண்மை.!  

பி.எஸ்.பி.பி பள்ளியின் ஆசிரியர் ராஜகோபாலன் தன்னிடம் பயிலும் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வரும் நிலையில் அந்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டமான பேரத்தில் ஈடுபட்ட சம்பவம் பிரபல நடிகை குட்டி பத்மினி மூலம் வெளிவந்துள்ளது. 

 பி.எஸ்.பி.பி பள்ளியின் பாலியல் சர்ச்சை பற்றி வெளிவந்ததும் நடிகை குட்டி பத்மினி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தனது மகளை பி.எஸ்.பி.பி பள்ளியில் சேர்க்க வரிசையில் நின்றபோது ஒய்.ஜி.பார்த்தசாரதி (மதுவந்தியின் பாட்டி) குட்டி பத்மினியை  அழைத்து 'நீ எல்லாம் வரிசையில் நிற்கலாமா? இந்த பள்ளி தொடங்க அடிக்கல் நாட்டிய போது கூட இருந்தவள் நீ' என்று அவரை அழைத்து சென்றதாக கூறியுள்ளார். 

அதன்பின் ஒரு மாதம் கழித்து பள்ளியில் இருந்து குட்டி பத்மினிக்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பை கேட்டதும் தன் மகள் ஏதோ தவறு செய்துவிட்டதாகவும், அதனால் தான் தன்னை அழைப்பதாகவும் நினைத்து பயந்தபடியே பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை அழைத்த ஒய்.ஜி. பார்த்தசாரதி  'நீ வருமானவரித்துறைக்கு பண்ணும் சீரியல் நன்றாக இருக்கிறது. நான் அதை பார்ப்பேன், நீ வருமான வரித்துறை சேர்மனை சந்தித்துள்ளீர்களா? எனக் கேட்டதாகவும். 

அதற்கு 'ஆம் நன்றாக தெரியும்,அவர் தான் வாரம் வாரம் கதை கொடுப்பார்' என்றும் குட்டி பத்மினி கூறியுள்ளார்.  அதன்பின் 'கொடைக்கானலில் ஒரு சொத்து வாங்கியிருக்கிறோம். ஆனால் அதை வேறு அக்கவுண்ட் பெயரில் வங்கியிருக்கிறோம். சட்டப்படி அது தவறாம். அதனால் அதற்கு  வருமான வரித்துறை அதிக தொகையை வரியாக விதித்து விட்டார்கள். அதைப் பற்றி பேச எங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் தரமாட்டேங்கிறார். அதனால அவரை பார்த்து பேசி எப்படியாவது அதை கரெக்ட் பண்ணி கொடுக்க வேண்டும்' என்று கேட்டதாக கூறியுள்ளார். அப்போது தான் எனக்கு புரிந்தது, அவர் என் மகளுக்கு சீட் கொடுத்தது இதற்கு தான் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார் குட்டி பத்மினி. 


மேலும் "நுங்கம்பாக்கம் வசந்தியை கூப்பிட்டு விசாரிங்க.என்னை போல எத்தனையோ பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளானது உங்களுக்கு புரியும்" என பி.எஸ்.பி.பி பள்ளியை குறிப்பிட்ட தனது ட்விட்டர் பக்கத்திலும் கூறியுள்ளார். இதைக் கண்ட ட்விட்டர் பயன்படுத்துவோர் யார் அந்த வசந்தி என்றும் கேட்டுள்ளனர்.