இப்போ வருமோ எப்போ வருமோ...! பொறுமையை இழக்க வைக்கும் மழை..! தமிழ்நாடு வெதர் மேன் ட்வீட்..!

இப்போ வருமோ எப்போ வருமோ...! பொறுமையை இழக்க வைக்கும் மழை..! தமிழ்நாடு வெதர் மேன் ட்வீட்..!

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கியது. அது முதலே நல்ல மழை பெய்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள பல ஏரிகளும், நீர்நிலைகளும் நிரம்பியது. பல மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டதால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகினர்.

Image

மழை வருமா வராதா?

கடந்த 10 நாட்களாக மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டு வந்தது. நவம்பர் 19,21 ஆகிய நாட்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்த்து. எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. மேகங்கள் கூடுவதும், கலைவதுமாக இருந்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்:

தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. இது நேற்றைய தினம் காரைக்காலில் இருந்து கிழக்கு-வடகிழக்கே சுமார் 400 கிமீ தொலைவிலும் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே சுமார் 420 கிலோமீட்டர் தொலைவிலும் இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது. இது மிக மெதுவாக நகர்ந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழக்கும் என கூறியுள்ளது.

இனி வரப்போகும் நாட்களில் மழைக்கான வாய்ப்பு என்ன என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: உச்ச நீதிமன்றத்தில் பரபர..! எடப்பாடிக்கு நோ சொன்ன நீதிபதிகள், ஓங்கிய ஓபிஎஸ்ஸின் கை..!

அடர் மேகங்கள்:

அதில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் சென்னையின் வட தமிழக கடற்கரையில் இருந்து தள்ளி உள்ளது. இன்னும் அது மெதுவாகவே நகர்ந்து வருகிறது. எலும்புக்கூட்டைப் போல 3 பக்கங்களிலும் மேகங்கள் இல்லாமல் வெட்டப்பட்டும் கிழிந்ததும் இருக்கிறது.. மற்றொரு பக்கம் அடர்ந்த மேகங்களைக் கொண்டு உள்ளது. இவை மெதுவாகக் கடற்கரைக்கு அருகில் நகர்கிறது.

Image

பொறுமை தேவை:

இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நமக்கே மனச்சோர்வைத் தருகிறது. கடந்த 4 நாள் டார்ச்சரில் முதன்முறையாக இவ்வளவு அடர்த்தியான மேகங்கள் காற்றழுத்த தாழ்வு மண்டலத்திற்கு மிக அருகில் உள்ளது. இப்போது இருக்கும் பெரிய கேள்வி ஒன்று தான். சூரியனின் நேரம் வந்துவிட்டது.. இனிமேல் இந்த பெரிய மேகங்கள் என்ன தான் செய்யப் போகிறது. நிலத்திற்கு அருகே வந்து மழையைத் தருமா என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இன்று மழை:

இன்று வடதமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.