பொள்ளாச்சியில் திமுக சார்பாக ஆனைமலையில் வேலைவாய்ப்பு முகாம்!

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் விழாவினை துவக்கி வைத்து பேசினார்.

பொள்ளாச்சியில் திமுக சார்பாக ஆனைமலையில் வேலைவாய்ப்பு முகாம்!

இதுவரை நடத்தப்பட்ட 8  வேலை வாய்ப்பு முகாம் மூலமாக 2000-க்கும் மேற்பட்டோர்  பயனடைந்துள்ளனர் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தகவல்.

வேலை வாய்ப்பு முகாம்

கோவை தெற்கு மாவட்டம் ஆனைமலையில் திமுக சார்பில்  தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் தலைமை தாங்கினார். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 600க்கும் மேற்பட்ட இளைஞர் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

எட்டுக்கும் மேற்பட்ட முகாம்கள்

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் விழாவினை துவக்கி வைத்து பேசினார். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் எட்டுக்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதாகவும் இதன் மூலமாக பல்வேறு பெரிய நிறுவனங்களில் 2000க்கும் மேற்பட்டோர் இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன் பெற்றுள்ளதாகவும் கூறினார்.

பெண்கள் அதிக அளவு வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்வது வரவேற்கத்தக்தது, இதனால் அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் மேம்படும் என்றார். மேலும் இன்று ஆனைமலை பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற முகாமில் முப்பதுக்கு மேற்பட்ட பிரபல நிறுவனங்கள் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.