வலைதளம் வாயிலாக உதவி கேட்ட நரிக்குறவர்கள்... செவிசாய்த்த முதல்வர்.,. ஓடோடி வந்து உதவிய அதிகாரிகள்!!

வலைதளம் வாயிலாக உதவி கேட்ட நரிக்குறவர்கள்... செவிசாய்த்த முதல்வர்.,. ஓடோடி வந்து உதவிய அதிகாரிகள்!!

திருப்பத்தூரில் சமூக வலைத்தளம் வாயிலாக முதல்வரிடம் உதவி கேட்ட நரிக்குறவர்களுக்கு 24 மணி நேரத்தில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த இந்திரா நகரில் வசிக்கும் 120க்கும் மேற்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து நரிக்குறவ சமுதாயத்தினர் உதவி கேட்டு சமூக ஊடகத்தின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதனையடுத்து  ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மதுசூதனன் ரெட்டி ஆகியோர் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 120 பயனாளிகளுக்கு, 15 நாட்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வழங்கினர்.