மலைப் பகுதியில் அழிந்து போன நெல் விவசாயத்தை செய்துவரும் குடும்பத்தினர்!

மலைப் பகுதியில் அழிந்து போன நெல் விவசாயத்தை செய்துவரும் குடும்பத்தினர்!

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பிரபலமான சுற்றுலாத்தலமாகும்.நகரப் பகுதி மற்றும் கிராம பகுதிகளில் சுற்றுலா பயணிகள் மனதை கவர்வதற்காக நிறைய இடங்கள் இருந்தாலும்... கொடைக்கானல் மலைப்பகுதி கிராமங்களில் சிறப்பாக விளங்குவது இங்கு இருக்கக்கூடிய மலை கிராம விவசாயம் தான்.

நெல்லுக்கு முக்கிய பங்கு

தரைத்தலங்களை போன்று அல்லாது மலைப் பகுதியில் விவசாயம் அடுக்கு விவசாய பகுதிகளாகவே இருக்கும்.இந்த விவசாய நிலங்களில் மலை காய்கறிகளான உருளைக்கிழங்கு , கேரட் , பீன்ஸ் வெள்ளைப்பூண்டு விவசாயம் இங்கு பிரசித்தி பெற்ற விவசாயமாக இருந்து வருகிறது.மலைப் பகுதியில் விளையக்கூடிய காய்கறிகளுக்கு எப்போதுமே தனி மவுசும் பல இடங்களில் உண்டு. இதனை ஆங்கில காய்கறிகள் என்றும் கூட அழைப்பார்கள். தமிழர்களுக்கு என்று தனி பெருமையாக இருக்கக்கூடியதில் நெல் முக்கிய பங்கு வகித்து வருகிறது.ஆனால் மலை பகுதியில் இதுவரை நெல் விவசாயம் பெரிய அளவில் செய்யப்படுவதில்லை.மலை நெல் விவசாயமும் அழிந்துவிட்டது. கொடைக்கானலில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருப்பது தான் பூண்டி என்ற கிராமம் இயற்கை எழில் கொஞ்சும் இந்த கிராமத்தில் இயற்கை விவசாயத்திற்கு பஞ்சமே இருக்காது.

நெல் விவசாயம் தரைத்தளங்களில் மட்டும் இருந்து வரக்கூடிய இந்த காலகட்டத்தில். மலை பகுதியில் மறைந்த போன இந்த மலை நெல் விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகிறது பாரம்பரிய குடும்பம்.மலைப்பாங்கான விவசாய நிலத்தில் நெல் மணிகளை பயிரிட்டு பத்து மாதங்கள் அதனை பாதுகாத்து தற்போது அறுவடைக்கும் தயாராகி வருகிறது.தரைதலங்களில் இருக்கக்கூடிய நெற்பயிர்களுக்கும் மழை பகுதியில் தற்போது விளையக்கூடிய இந்த நெற்பயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

பாரம்பாரியத்தை காப்பாற்றும் குடும்பம்

தரை தளங்களில் இருக்கக்கூடிய நெற்பயிர்கள் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும். ஆனால் மலைப் பகுதியில் விளையக்கூடிய இந்த நெற்பயிர்கள் 10 மாதங்களுக்கு பிறகு தான் அறுவடைக்கு தயாராகிறது விற்பனைக்காக செய்ய முடியாத நிலை இருந்தாலும் பாரம்பரியம் விட்டுப் போகக்கூடாது. என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த விவசாயத்தை மேற்கொண்டு தற்போது கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். எந்தப் பகுதியிலும் விளையாத கருங்குருவை, செங்குருவை ஆகிய இரண்டு வகையான நெற்பயிர்கள் இங்கு பயிரிடப்பட்டு இருக்கிறது.

முதலில் சுப்பிரமணி என்ற முதியவர் குடும்பத்தினருடன் சேர்ந்து இந்த நெர் பயிர்களை பயிரிட்டு இருந்தார். இந்த ஆண்டு இந்த நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக ஏழு விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள் அழிந்துபோன வகையான நெற்பயிர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் இருந்திருக்கிறது. இந்த மழையில் ஏழு அடி வரை வளரும். மேலும் இந்த கருங்குருவை செங்குருவை அரிசிகளுக்கு மேலும் ஒரு சிறப்பு இருப்பதாகவே கூறப்படுகிறது ஒரு முறை இந்த அரிசியை சாப்பிட்டால் மூன்று முறை சாப்பிடத் தேவையில்லை. அந்த அளவிற்கு உணவு சத்து இந்த அரசியில் இருப்பதாகவும் இவர்கள் கூறுகிறார்கள்.  குடும்பத்துடன் பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்காக நெல்மணிகளை விவசாயம் செய்து வருவது போன்று அழிந்து போன மலை நெல்லை மற்ற விவசாயிகளும் பயிரிட வேண்டும் மலை நெல்லை காப்பாற்றுவதற்காக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.